திமுகவின் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும் மத்திய மண்டலத்தில் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அவரது மகன் சூர்யா கடந்த மே மாதம் 8 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின்னர் பாஜகவில் தன்னார்வத்துடன் சூர்யா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.



கட்சியின் முக்கிய தலைவர் எம்.பி திருச்சி சிவாவின் மகன் கட்சியின் எதிரி கட்சியாக கருதப்படும் பாஜகவில் இணைந்ததால் சில நாட்கள் இரு கட்சியினரும் பரவலாக பேசி வந்தனர்.


மேலும் சூர்யா திமுகவை விட்டு பாஜகவில் இணைந்ததற்கு காரணம், திமுகவில் திருச்சி சிவாவுக்கும், மகன் சூர்யாவுக்கும் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் மகன் சூர்யா இருந்ததுதான் என்றவாறு சிலர் தங்கள் கருந்துகளையும் தெரிவித்து வந்தனர்.


மேலும் படிக்க | முதலையை விழுங்கும் மலைப்பாம்பு: திகிலூட்டும் வீடியோ வைரல் 


பாஜகவில் இணைந்து 2 மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில், தனியார் பேருந்து ஒன்றைக் கடத்தியா புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.  முன்னதாக உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக பேருந்தின் உரிமையாளரிடம்  பணம் கேட்டு மிரட்டியதாக சூர்யா மீது குற்றம் சுமத்தப்பட்டது.


இந்நிலையில் விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியதாக பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் திருச்சி காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



மேலும், திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் சூர்யாவிடம் இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்புச் சம்பவமாக மாறியுள்ளது.


மேலும் படிக்க | நண்பன் ஒருவன் வந்த பிறகு..நண்பனை உயிரை கொடுத்து காப்பாற்றிய குரங்கு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR