சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் வி.கே.சசிகலாவின் (VK Sasikala) விடுதலை தற்போது தமிழகத்தில் பெரிதாகப் பேசப்படும் முக்கிய வுஷயங்களில் ஒன்றாகும். இதனால், அனைத்து அரசியல் கட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அமமுக-வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் (TTV Dinakaran) ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு சென்றதால், மாநில அரசியல் வட்டங்களில் அரசல் புரசலாக பல வதந்திகள் பரவத் தொடங்கின. அவர் பா.ஜ.க-வின் சில மூத்த தலைவர்களை சந்தித்ததாக வதந்தி பரப்பப்பட்டது. இரவு 8:30 மணியளவில் அவர் சென்னைக்கு திரும்பினார்.


தினகரன், தனது பிஏ மற்றும் கட்சியின் செயல்பாட்டாளரான மல்லிகார்ஜுனனுடன், சென்னையில் இருந்து காலை 10.15 மணியளவில் ஒரு சார்டர்ட் விமானத்தில் டெல்லிக்கு (Delhi) புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி பரவத் தொடங்கியவுடன், அவரது டெல்லி பயணம் தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும் என்ற ஊகங்கள் சமூக ஊடகங்களில் தீயாய் பரவின.


எனினும், தினகரனின் பயணத்தின் நோக்கம் சசிகலாவிற்கு ஒரு விரைவான விடுதலையைப் பெறுவதே என்று அமமுக (AMMK) வட்டாரங்கள் கூறின. "அவர் தனது அத்தையின் விடுதலைக்காக, சட்ட ரீதியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் பேசவே டெல்லிக்கு சென்றார்.


மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் அவரது சிறை தண்டனையை நீட்டிக்க முயற்சிக்கையில், அவர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு (Assembly Elections) தயாராக, விரைவாக சசிகலாவை சிறையிலிருந்து விடுதலை பெற வைப்பது குறித்து வக்கீல்களுடன் கலந்துரையாட தேசிய தலைநகருக்கு சென்றார்” என்று ஒரு கட்சித் தலைவர் கூறினார்.


ALSO READ: வெளிவரும் வேளையில் முடக்கப்படும் சொத்துக்கள்: இது சசிகலாவின் விதியா அல்லது அரசியல் சதியா?


சமீபத்தில், ரூ .10 கோடி அபராதம் செலுத்தப்பட்டால், சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று RTI மூலம் கோரப்பட்ட பதிலில் கூறப்பட்டிருந்தது. அபராதத் தொகையை செலுத்த முடியாவிட்டால், அவரது சிறைக்காலம் நீட்டிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.


தினகரனின் குடும்பம் பாஜகவால் (BJP) மிகவும் அவமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னர், அவர்களது சொத்துக்களை வருமான வரித் துறை (Income Tax Department) சோதனை செய்த காலங்களில் இந்த அவமதிப்பு மிக அதிகமாக இருந்துள்ளது. ஆகையால் இந்த சூழ்நிலையில், தினகரன் மத்திய அரசிடம் எந்த உதவியையும் பெற மாட்டார் என்று அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. சசிகலாவின் விடுதலை அவர்களின் அனைத்து வாக்குகளையும் பறிக்கும் என்பதால் பாஜக-வும் டிடிவி-க்கு உதவாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.


மொத்தத்தில், வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில் பல வினோத கூட்டணிகளையும் பல புதிய கட்சிகளையும் நபர்களையும் மக்கள் காண்பார்கள் என்பது திட்டவட்டம்.


ALSO READ: ‘இந்த மாத இறுதிக்குள் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்புகள்’- சசிகலாவின் வழக்கறிஞர்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR