‘இந்த மாத இறுதிக்குள் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்புகள்’- சசிகலாவின் வழக்கறிஞர்!!

முறையற்ற சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சிறைத்தண்டனைக் காலம் சட்டப்படி குறைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவிலேயே விடுவிக்கப்பட உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2020, 10:58 AM IST
  • வி.கே.சசிகலா 66.65 கோடி ரூபாய் டி.ஏ. வழக்கில் நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
  • 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.
  • 2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்றார்.
‘இந்த மாத இறுதிக்குள் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்புகள்’- சசிகலாவின் வழக்கறிஞர்!! title=

சென்னை: முறையற்ற சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சிறைத்தண்டனைக் காலம் சட்டப்படி குறைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவிலேயே விடுவிக்கப்பட உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா (VK Sasikala), 66.65 கோடி ரூபாய் டி.ஏ. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் ஜெயலலிதாவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர பாண்டியன், வி.கே.சசிகலா செப்டம்பர் இறுதிக்குள் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில், சசிகலா சிறைவாசம் அனுபவிக்கும் போது அவரது நல்ல தன்மை மற்றும் நடத்தை காரணமாக, அவரது சிறைத்தண்டனைக் குறைக்கப்பட்டுள்ளது. அவர் சரியான அறிவுரை வழங்கப்பட்டு விடுவிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, வி என் சுதாகரன் ஆகியோரும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவின் (ADMK) தலைமைப் பொறுப்பேற்ற சசிகலா, பின்னர் முதலமைச்சர் கே பழனிசாமி (K Palanisamy) தலைமையிலான பிரிவினரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போதைய ஆளும் கட்சிக்கு போட்டியாக கருதப்படும் சசிகலாவின் மருமகன் டிடிவி தினகரனின் (TTV Dinakaran) பிரிவுடன் சசிகலா சேர வாய்ப்புள்ளது என்று பல ஊகங்கள் உள்ளன.

ALSO READ: வெளிவரும் வேளையில் முடக்கப்படும் சொத்துக்கள்: இது சசிகலாவின் விதியா அல்லது அரசியல் சதியா?

இதற்கிடையில், வருமான வரித் துறை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 200 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள, வி.கே.சசிகலாவுக்கு சொந்தமான 65 பினாமி சொத்துக்களை முடக்கியுள்ளது. இணைக்கப்பட்ட சொத்துக்களில் வேதா நிலையம் எதிரே போயஸ் கார்டனில் கட்டுமானத்தில் உள்ள ஒரு புதிய வீடும் அடங்கும்.

ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம், ஒரு அரசாங்க நினைவுச்சின்னமாக மாற்றப்படுகிறது. அனைத்து 65 சொத்துக்களும் 2003-05 ஆம் ஆண்டில் சசிகால குடும்பத்தினரால் கையகப்படுத்தப்பட்டன. வருமான வரித் துறையின் சென்னை பிரிவு இந்த சொத்துக்களை பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்தச் சட்டம், 2016 இன் கீழ் இணைத்துள்ளது.

ALSO READ: COVID Impact: கலைவாணர் அரங்கத்தில் உள்ள ஆடிடோரியத்தில் நடக்கும் தமிழக சட்டசபைக் கூட்டம்!!

Trending News