திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இரண்டு வயது  பெண் குழந்தை நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து உயிரிழப்பு! உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்! பத்து ஆண்டுகளுக்குப்பின் பிறந்த குழந்தை என உறவினர்கள் கதறியது பார்ப்பவர் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சார்ந்த சுந்தர்  ராதிகா இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் திருமணம் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு கௌசிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.


தற்போது இரண்டு வயதான கௌசிகா, வீட்டில் வெளியே விளையாடி கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு கட்டப்பட்டிருக்கும் நீர் தேக்க தொட்டியில் விழுந்துள்ளது.


பின்னர் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் குழந்தையை பரிசோதனை செய்த மருதவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | இந்தியாவால் துன்புறுத்தப்பட்ட நித்யானந்தா? ஐநா-வில் கைலாசா சொன்னது என்ன?


அதன் பின்னர் மருத்துவர்கள் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்


மேலும் இச்சம்பவறிந்து வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையை பிரேத பரிசோதனை செய்யாமல் உடல் ஒப்படைக்கப்படும் கூறினார்கள்.


இருப்பினும்,  பிரேத பரிசோதனை செய்து குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்ததால் 9 வருடங்களுக்குப் பிறகு பிறந்த குழந்தை தற்போது பிணமாகிவிட்டது என கூறி கத்தி கதறினர். 


இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | PM-Kisan: வங்கி கணக்கில் ரூ.2000 வந்துவிட்டதா? இல்லையென்றால் உடனே இத பண்ணுங்க!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ