வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை… வெற்றி ஒன்றே திமுகவின் இலக்கு - உதயநிதி ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை குறி வைத்து திமுக நிர்வாகிகள் தேர்தல் பணி ஆற்றுமாறு அறிவுறுத்தியிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை என எச்சரித்திருக்கிறாராம்.
2024 நாடாளுமன்ற பணிகளை துரித்தப்படுத்தி வருகிறது ஆளும் கட்சியான திமுக. கடந்த வாரம் தேர்தலுக்கான பணிகளை துரித்தப்படுத்த குழுக்களை அமைத்தது திமுக தலைமை. அமைக்கபட்ட குழுக்களும் தங்களது பணியை துவங்கியுள்ளன. முதற்கட்டமாக திமுக தலைமை அழுவலகமான அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க துங்கியிருக்கிறது.
மேலும் படிக்க - ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
அதேவேளையில் ஒருங்கிணைப்புக் குழு 24ம் தேதி துவங்கி வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனையை துவங்கியுள்ளது. வியாழக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில்
முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தத கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை 2024 நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
கட்சி பிரச்சனைகளை தீர்க்க உறுதி
தற்போதைய கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக்கட்சியினரின் பலம், திமுகவில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தனர். பிரச்சனைக்குரிய பகுதிகளில் நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டன. சிலவற்றில் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும், சிலவற்றில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடவடிக்கை இருக்கும் எனவும் ஒருங்கிணைப்புக்குழு உறுதியளித்துள்ளனர்.
திமுக நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை
தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர் தொடங்கி- ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவினர் எச்சரித்துள்ளனர். இறுதியாக இத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல் எனவும், இத்தேர்தலில் வெற்றி என்பது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
மேலும் படிக்க - எடப்பாடி பழனிசாமி போடும் அரசியல் கணக்கு..! பாஜக கப்சிப் - அதிமுகவுக்கு கைகொடுக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ