Udhayanidhi Stalin : விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலைமச்சராகலாம் என்ற தகவல் பரவிக் கொண்டிருந்த நிலையில், அதனை அண்மையில் உறுதிப்படுத்தினார் அமைச்சர் ராஜகண்ணப்பன். ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என கூறிவிட்டு, சாரி.. சாரி ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குப் பிறகு தான் அப்படி சொல்ல வேண்டும் என பேச்சுவாக்கில் சொல்லிவிட்டார். இப்போது, மற்றொரு அமைச்சரான கீதா ஜீவனும் இதனை உறுதிபடுத்தியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார்... காரணத்தை விளக்கிய தங்கம் தென்னரசு!


திருவள்ளூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயல்பாடுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர்  பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த குடில்களை பார்வையிட்டு சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட மகளிர் அதிகார மையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அவர், கூட்ட அரங்கில் நலிந்த பிற்படுத்தப்பட்ட கிறிஸ்துவ மகளிர் 11 பேருக்கு ₹1.65  லட்சம் மதிப்பிலான சிறு தொழில் தொடங்க நிதி உதவிகளை வழங்கினார். மேலும் தொழிற்சாலைகள் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் பெண்கள் ஆன்லைன் மூலமாக பாலியல் புகார் அளிக்கும் விதமாக செயலியை அறிமுகப்படுத்தினார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், சென்னையில் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ சேவை இந்த ஆண்டு தொடங்கப்படும். சென்னையை தொடர்ந்து  மற்ற மாவட்டங்களும் பிங்க் ஆட்டோ திட்டம் வரும். பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை சட்டம் 2013 கீழ் மூலமாக 10 பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் பெண்கள் புகார் அளிக்க புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக 3.20 லட்சம் மணவர்கள் பயன் பெறும் வகையில் ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார். 


தொடர்ந்து பேசிய கீதா ஜீவன், இன்னும் 200 பேருக்கு அத்திட்டம் பெற வங்கி கணக்கு தொடங்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது .காலை உணவு திட்டம் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் விரிவுபடுத்த முதல்வர் முடிவு செய்வார். துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்  19ஆம் தேதி வருவதை எதிர்பார்க்கலாம், அனைவரும் எதிர்பார்க்கின்றனர், உதயநிதி துணை முதல்வராவது தனிப்பட்ட திமுக எடுக்கும் முடிவு" எனவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை கசியவிடும் எதிர்கோஷ்டி - கடுப்பில் காக்கி மாஜி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ