நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு முக்கிய புள்ளிகள் தாவப்போவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, கோவையில் இருந்து மிகப்பெரிய புள்ளிகள் பாஜகவில் இணையப்போவதாக தெரிவித்தார். அவரின் இந்த பேட்டிக்குப் பிறகு யார் அந்த பெரிய புள்ளி? என்ற கேள்வி எழுந்தது. அரசியல் வட்டாரத்தில் இருப்பவர்கள் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் எஸ்பி வேலுமணி என நினைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்


 ஆனால், பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது அவர் முன்னிலையில் பாஜகவில் இணையாமல் அண்ணாமலை முன்னிலையிலா அக்கட்சியில் இணையப்போகிறார்? என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கேற்றார்போல் பாஜகவின் ஐடி விங் ஐடிக்களும் வேலுமணிக்கு வரவேற்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இருப்பினும் அண்ணாமலை கூறிய நேரத்தில் யாரும் பாஜகவில் இணையவில்லை. கடைசி வரை எதிர்பார்த்தவர்கள், தங்கள் லிஸ்டில் இருப்பவர்கள் வராததால் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுக் கட்சியினர் இணைப்பு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யபட்டது. 


அண்ணாமலை அங்கு வராத நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர். நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை கூறுவதற்கு ஒரு பிரஸ் மீட்டா? என செய்தியாளர்கள் கேட்க, எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் உண்மையான காரணத்தை சொல்ல முடியாமல், தற்காலிகமாக மாற்றுக் கட்சியினர் இணைப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மழுப்பலான பதிலை கூறி, அந்த பிரஸ் மீட்டை முடித்தனர். 


இதற்கு பின்னர் விளக்கமளித்த அண்ணாமலை, பெரிய புள்ளிகள் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தாலும் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை என்றும், அதற்கேற்ற சூழல்நிலை அமையும்போது நிச்சயம் அந்த பெரிய புள்ளிகள் பாஜகவில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சூழலில், அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணையப்போகும் அந்த இரண்டு பேர் யாராக இருக்கும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமாக இருக்கலாம் என கிண்டலாக பதிலளித்துள்ளார். 


மேலும் படிக்க | 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்...' மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ