அரசியலுக்குள் நுழைந்த உதயநிதி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இதனையடுத்து அவரை அமைச்சராக்க வேண்டுமென்று அவரது நண்பரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூபம் போட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரம்பத்தில் இதுகுறித்து பொய்யாமொழி உள்ளிட்ட சிலர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க சமீபத்தில் பலர் இதுதொடர்பாக வாயை திறந்துள்ளனர். குறிப்பாக திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உதயநிதி அமைச்சராக வேண்டுமென்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினை திமுகவின் எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்துவருகின்றனர். வைக்கப்படும் கட் அவுட்களில் மூன்றாம் கலைஞர் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெறும். இது அனைவரையும் கவரவில்லை. மாறாக இது திராவிட முன்னேற்ற கழகமா இல்லை அண்ணா திராவிட முன்னேற்ற கழகமா என்ற கேள்வியையும் பலர் எழுப்பினர்.



அதுமட்டுமின்றி, உதயநிதியை திமுகவினர் புகழ்வதை பார்க்கையில் ஜெயலலிதாவை புகழ்ந்த அதிமுகவினருக்கும், தற்போதைய திமுகவினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றனர் அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களுமம்.


இப்படிப்பட்ட சூழலில் புதுக்கோட்டையில் நடந்த முப்பெரும் விழாவில் நேற்று உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய உதயநிதி, “தமிழ்நாட்டில் கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள்.


மேலும் படிக்க | சினிமாவில் களமிறங்கும் செந்தில் மகன்


இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது கிடையாது. கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.


என்னைப் பாராட்டிப் பேசுகின்றவர்கள் என் மீது அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும்போது, மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் இப்படியெல்லாம் அழைக்கின்றீர்கள். அப்படி அழைப்பதில் எனக்கு துளிகூட விருப்பம் கிடையாது. 


 



கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர்தான். கலைஞருக்கு நிகர் அவர் மட்டும்தான். இரண்டாம் கலைஞர், மூன்றாம் கலைஞர், நான்காம் கலைஞர் என்று தயவு செய்து யாரையும் அழைக்காதீர்கள். 


சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். ஏனென்றால், இங்கே இருக்கின்ற பெரியவர்களோடு ஒப்பீடு செய்து பார்க்கும்போது, அவர்களுடைய உழைப்பில் நான் மிகமிகச் சின்னவன். அதனால், என்னை சின்னவர் என்றே கூப்பிடுங்கள்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR