உதயநிதி டி ஷர்ட் அணிவது அவரது அரை வேக்காடுத்தனத்தை காட்டுகிறது - ஜெயக்குமார்!
சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒவ்வொருவரும் வயித்தெரிச்சலில் திமுக அரசை சபித்து விட்டு சென்றார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளரோ, துறைச் செயலாளரோ டீ சர்ட் அணிந்து வந்தால் உதயநிதி ஒத்துக் கொள்வாரா உதயநிதி டி ஷர்ட் அணிந்து செல்வது அவரது அரை வேக்காடுத்தனத்தை தான் காட்டுகிறது. கார் பந்தயத்திற்கு உதயநிதி காட்டிய ஆர்வத்தை வான் சாகச நிகழ்ச்சிக்கு ஏன் காட்டவில்லை? வான் சாகச நிகழ்ச்சி இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை, சாகச நிகழ்ச்சிகளுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டதாக கூச்சநாச்சமே இல்லாமல் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சொத்து வரி உயர்வு , மின்கட்டண உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு , பால் விலை உயர்வு, மயான பூமியை தனியார் மயமாக்குதல் என தமிழக மக்களின் வாழ்க்கையை திமுக அரசு சீரழித்து வருவதாக கூறி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க - பென்ஷன் தேதியில் மாற்றம்.. வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை ராயபுரம் பாஷ்யம் நாயுடு தெருவில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாவட்டத்தில் 200 வட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல வான் சாகச நிகழ்ச்சி அசம்பாவிதங்களை மறைத்துள்ளார்கள். வான் சாக அசம்பாவிதங்களுக்கு மாநில அரசுதான் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.சாகச நிகழ்ச்சியில் முறையான திட்டமிடல், குடிநீர் வசதி, சுகாதார வசதி, ஆம்புலன்ஸ் வசதி ,பேருந்து வசதி என எதுவுமே இல்லை.
சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒவ்வொருவரும் வயித்தெரிச்சலில் திமுக அரசை சபித்து விட்டு சென்றார்கள். அமைச்சர் மா சுப்பிரமணியன் கூச்ச நாச்சமே இல்லாமல் பேட்டி அளித்துள்ளார். சேகர்பாபு கூறுவதை தான் சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்கிறார். போன் செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பேச முடியவில்லை.கார் ரேஸுக்கு காட்டிய கவனத்தை வான் சாகச நிகழ்ச்சிக்கு காட்டவில்லை. கார்பந்தயத்திற்கு உதயநிதி காட்டிய ஆர்வத்தை வான் சாகச நிகழ்ச்சிக்கு காட்டவில்லை.ஐந்து பேரின் உயிர் பறிபோய் உள்ளது நீதிமன்றம் சும்மா விடக்கூடாது. உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் போதாது 10 லட்சம் வழங்க வேண்டும்.
முதலமைச்சரின் குடும்பத்திற்கு ஏர்கூலர் வசதியோடு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. தனியா நிகழ்ச்சிகளில் டி-ஷர்ட் போடலாம். நானே பல தனியார் நிகழ்ச்சிகளில் டி-ஷர்ட் அணிந்து தான் செல்வேன். ஆனால் அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சராக இருந்து கொண்டு உதயநிதி டி ஷர்ட் அணிந்து செல்லலாமா..தலைமைச் செயலாளரோ, துறை செயலாளரோ டீசர்ட் அணிந்து வந்தால் உதயநிதி ஒத்துக் கொள்வாரா என கேள்வி எழுப்பினார். உதயநிதி டீ சர்ட் அணிந்து செல்வது அரைவேக்காடு தனத்தை தான் காட்டுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி மரபை பின்பற்ற வேண்டும், மரபு மீறி செயல்படக்கூடாது.
தமிழன் பண்பாடே வேஷ்டிதான். டி.சர்ட் உங்கள் கட்சி நிகழ்ச்சி போட்டு செல்லுங்கள்.. முகத்தில் கூட கட்சி சின்னத்தை வரைந்துகொள்ளுங்கள். ஆனால் அரசு நிகழ்ச்சியில் இப்படி செய்வதி அரைவேக்காடு தனம். அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னம், கட்சி கொடியை போட்டுச்செல்லக்கூடாது. மாகாமக சம்பத்தில் உயிழப்பை குறிப்பிட்டு ஆளும் கட்சி குற்றச்சாட்டு வைப்பது தொடர்பான கேள்விக்கு... அம்மா அந்த நிகழ்ச்சிக்கு யாரையும் அழைக்கபில்லை. அது ஒரு ஆன்மீக நிகழ்ச்சி. ஆனால் இவர்கள் அரசு இளையதளம், ஊடங்களில் விளம்பரங்கள் கொடுத்து வரவழைத்து சாகடித்துள்ளார்கள். அதை இதனுடம் ஒப்பிட முடியுமா? 15 லட்சம் பேர் வருவார்கள் என தெரிந்த்தும் அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு.. முடிந்த கதையை பேசுகிறார்கள். 2026 ல் இது பிரதிபலிக்கும் என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ