உகாண்டாவில் இருந்து கடந்த 6ஆம் தேதி விமானம் மூலம் கோவை வந்தடைந்த சான்ட்ரா நண்டிஸா(33) என்ற பெண் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த புனலாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து சான்ட்ரா நண்டிஸாவை பிடித்து சோதனையிட்டுள்ளனர். அவர் கொண்டு வந்த பைகளில் எதுவும் சிக்கவில்லை. அதனை தொடந்து அந்த பெண்ணை தீவிர சோதனைக்கு உட்படுத்த அவரின் வயிற்றில் போதை மாத்திரைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


போதை மாத்திரையை குப்பிகளில் அடைத்து அதை விழுங்கி கடத்தி வந்திருக்கிறார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரது வயிற்றில் இருந்து 81 மாத்திரை குப்பிகள் வெளியே எடுக்கப்பட்டது. (வயிற்று போக்கு மருந்து கொடுத்து வெளியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது). 



நேற்று வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாத்திரை குப்பிகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன. அதனை சோதனை செய்ததில் மெத்தபெட்டேமன் போதை மருந்து என தெரியவந்துள்ளது. அதன் மதிப்பு 4 கோடி என கூறப்படுகின்றது. இதனையடுத்து இன்று அந்த பெண் கோவை அத்தியாவசிய பண்டங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



மேலும் படிக்க | தந்தையை துடிதுடிக்க கொலை செய்த வளர்ப்பு மகள்..!


தற்போது பிடிபட்ட சான்ட்ரா நண்டிஸாவை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | உறவினருடன் செல்பி எடுத்த மனைவிக்கு கத்தி குத்து - கணவர் வெறிச்செயல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR