பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவழைப்பதற்காக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. இந்த தீர்மானத்தின் விவாதம் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக எம்பி கனிமொழி மற்றும் டிஆர் பாலு ஆகியோரின் பேச்சுக்கு பதில் கொடுத்தார். நேற்று மக்களவையில் பேசிய கனமொழி தமிழ்நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் செங்கோலைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறுவியிருக்கிறீர்கள்.  உங்களுக்கு தமிழ் கலாச்சாரம் குறித்து தெரியாது. பாண்டியன் செங்கோல் தகர்ந்த வரலாறு தெரியுமா?, கண்ணகியை முழுமையாக படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | SIP முதலீடுகளில் வரலாறு காணாத லாபம்! சூப்பர் வருமானத்துக்கு காரணம் என்ன?


மகாபாரதத்தில் வரும் திரௌபதியைபோல் மணிப்பூர் பெண்களும் தங்களைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் வேண்டினார்கள். கடவுளும் உதவ வரவில்லை, அரசும் வரவில்லை. மகாபாரதத்தை ஒழுங்காக படித்தவர்களுக்கு தெரியும்… திரௌபதி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மட்டுமல்ல, அதைப் பார்த்துக் கொண்டு மரம் போல நின்றிருந்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.  மணிப்பூர் விவகாரத்தில் மட்டுமல்ல ஹத்வாஸ், உனாவ், பில்கிஸ் பானு, ஏன் சமீபத்தில் போராடிய மல்யுத்த வீராங்கனை விவகாரம் வரை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களை இந்த தேசத்தின் தாய்மார்கள் தண்டிப்பார்கள்" என ஆவேசமாக பேசியிருந்தார்.


அவருக்கு இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் பேசும்போது, " செங்கோலை கைத்தடியாக பயன்படுத்தியபோது அது தமிழர்களுக்கு அவமானம் இல்லையா?. பிரதமர் மோடி அந்த செங்கோலை பெருமைமிகு இடத்தில் வைத்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதா?. சிலப்பதிகாரம் நம் அனைவரையும் தமிழர்கள் என்று சொல்கிறதே தவிர திராவிடர்கள் என்று சொல்லவில்லை. சிலப்பதிகாரம் சொல்லும் வழியில் பிரதமர் மோடி ஆட்சி நடத்துக்கிறார். தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளக்கூடாது என்ற திணிப்பு இருந்தது. 25.3.1989 தமிழ்நாடு சட்டசபையிலேயே ஜெயலலிதா அவர்களுடைய சேலை பிடித்து இழுக்கப்பட்டது. 



அதற்கு பிறகு முதலமைச்சராகாமல் இந்த அவைக்கு நான் வரமாட்டேன் என அவர் சபதமிட்டார். 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக அந்த அவைக்கு வந்தார். ஆனால் இவர்கள் திரௌபதி குறித்து பேசுகிறார்கள். மதுரை எயம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே கட்டட பணிகள் தாமதமாவதற்கு காரணம். இதற்கு தமிழக அரசே காரணம்" என கடுமையாக குற்றம்சாட்டினார். அவரைப் போலவே நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்மிருதி இரானியும் ஊழலைப் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணிக்கும் தகுதி இல்லை. திமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து பேசுகிறீர்கள் என ஆவேசமாக பேசினார். 


நாடாளுமன்றத்தில் மற்ற மாநிலக் கட்சிகளின் பெயர்களை குறிப்பிடுவதைக் காட்டிலும் திமுகவின் பெயரை மட்டும் மத்திய அமைச்சர்கள் தங்கள் உரையில் குறிப்பிட்டு விமர்சித்து வருவதால், டார்கெட் திமுக என்பது தெளிவாகிறது என்ற பேச்சும் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | தங்கம் வாங்க காத்திருப்போருக்கு டபுள் ஜாக்பாட்! விலையில் பெறும் வீழ்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ