நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஹலால் சான்றிதழுக்கு தடை போட்ட உபி அரசு - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றிதழுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஹலால் சான்றிதழுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு தேமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிஜி சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " நாடு முழுவதும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டுகொண்டு மாட்டுக்கறியை உண்பவர்களை சங் பரிவார கும்பல்கள் தேடிச்சென்று அடித்து துன்புறுத்துவதும், குறிப்பாக நாடெங்கும் இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கு சென்று திட்டமிட்டு மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று சொல்லி அடித்து சாகடிப்பதும் மதவெறி தலைக்கு ஏறி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லவில்லை என்றால் இஸ்லாமியர்களை முட்டி போட வைத்து அடித்து துன்புறுத்தும் காணொளிகளையும் சமூகவலைத்தளங்கள் மூலமாக நாம் பார்த்திருக்கிறோம்.
மேலும் படிக்க | மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி..!
இந்து என்கின்ற வார்த்தையை வைத்துக் கொண்டு ஜனநாயக இந்திய நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி பல கலவரத்தை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வரும் சங்பரி வார சங்கங்கள் தான் நாட்டிலேயே அதிக அளவில் மாட்டுக்கறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருப்பதில் உத்திர பிரதேசம் மாநிலம் முதல் இடமாக உள்ளது என்று ஆய்வுகள் சொல்லுகிறது. நிலைமை இப்படி இருக்க இவர்கள் கோமாதா என்று வழிபடுவது ஒரு புறமும் அந்த கோமாதாவை கொன்று குவித்து வெளிநாடுகளுக்கு பல்லாயிரம் டன் கணக்கில் ஏற்றுமதி செய்து வருவதையும் கூர்ந்து கவனித்தால் இவர்களின் நாடகம் நாட்டு மக்களிடையே தெள்ளத்தெளிவாக தெரியும்.
ஆகவே மாட்டை வைத்து மனிதனை அடித்து துன்புறுத்தி அரசியல் செய்யும் இந்த கோமாளி கூட்டங்களுக்கு வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டி இந்தியா கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்கள் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. செல்லும் இடமெல்லாம் மத்திய பாஜக பொய் பிரச்சாரங்களை பரப்புவதை நாம் பார்க்கலாம். ஏழை விவசாயிகளின் கடன்களை கட்டவில்லை என்று சொல்லி நடுத்தெருவில் நிற்க வைப்பதும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி பல்லாயிரம் கோடிகளை நடுத்தர மக்களிடையே கொள்ளையடிப்பதும் பெரும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிக்கணக்கான வங்கி கடன்கள் தள்ளுபடி செய்வதும் அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலைகளும் பெட்ரோல் டீசல் கேஸ் என்று வின்னை மட்டும் அளவில் விலைவாசி ஏற்றமும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
பாஜகவின் மக்கள் விரோதே போக்கை. இப்பேற்பட்ட நிலையில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி அரசு ஹலால் சான்றிதழ்க்கு தடை விதித்திருக்கிறது. ஆகவே இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது பாஜக வின் இரட்டை நிலைப்பாட்டை தேசிய முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் படிக்க | முறைகேடு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்..! 6 மாதம் கெடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ