திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காம நாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர்(23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை அருந்தியுள்ளார். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய பொருளாதாரம் இல்லை எனக்கூறிய காமநாயக்கர், தன் மகனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் மாற்றம் செய்து தர வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | முறைகேடு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்..! 6 மாதம் கெடு
அதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செயற்கை சுவாச கருவிகளுடன் ஆண்டி நாயக்கரை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரும்பாத காமநாயக்கர், தனது பொன்னம்பட்டி வீட்டிற்கு தன் மகனை அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்பட்ட ஆண்டி நாயக்கர் எந்தவித அசைவுமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட காமநாயக்கர் உள்ளிட்ட உடனிருந்தவர்கள் ஆண்டிநாயக்கர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து மயான பகுதியிலேயே ஆண்டிநாயக்கரை வைத்துக்கொண்டு கதறி அழுத்துள்ளனர்.
அப்போது ஆண்டிநாயக்கர் மூச்சுவிட்டு கண் விழித்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஆண்டிநாயக்கரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் திரும்பிய செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு... மன்னார்குடியில் அண்ணாமலை சீற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ