தமிழக முதல் அமைச்சராக திமுக (DMK) தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாக பதவியேற்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் அமைச்சராக பதவியேற்ற பின்பு பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய மு.க ஸ்டாலின் (MK Stalin) தலைமைச்செயலகம் வருகை தந்தார். அங்கு முதல் அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். அதன்படி முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின்ன் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரும் முதல் அமைச்சரின் முதன்மை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


ALSO READ | கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!


இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு (V Irai Anbu) நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றபட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர, சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்ட பலபொறுப்புகளில் இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் தனது பணிகளை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பணியாக, கொரோனா (Corona Relief) நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அவை., 


1.ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் இம்மாதமே வழங்கப்படும். 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் இதனால் பலன் பெறுவார்கள்.
2. நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக  பயணிக்கலாம்.
3. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. இந்த வூதியா கட்டணம் மே 16 முதல் அமலுக்கு வருகிறது.
4.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு.
5. உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறை உருவாக்க உத்தரவு. இதில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் 100 நாட்களில் தீர்வு காண உத்தரவு.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR