சென்னை: இலங்கையில் நீண்டகாலமாகவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் (UN Human Rights Council) தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், தீர்மானத்திற்கு எதிராக 11 நாடுகளும் வாக்களித்து. இதனால் இலங்கைக்கு ( Sri Lanka) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்  இந்த வாக்கெடுப்பில், நடுநிலை வகிப்பதாகக்கூறி இந்திய அரசு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல தமிழக அரசியல் தலைவர்கள் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (Vaiko), "ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம்" செய்துள்ளது என கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 


இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது இலங்கை அரசு.


ALSO READ | செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு? வைகோ ஆவேசம்


இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.


தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்கைகு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள். இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


ALSO READ | ‘தமிழினத் துரோகி" முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது: வைகோ கோரிக்கை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR