நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலானது புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். சென்னை - கோவை இடையே 3 ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வந்தே பாரத் ரயில் அட்டவணை


பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் முறைப்படி இயங்க இருக்கிறது. சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் கோவை சென்றடையும். இடையே 3 ரயில் நிலையங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில் நிற்கும். சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தினமும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.


மேலும் படிக்க | PM Modi: பிரதமர் மோடி வருகை... சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் தெரியுமா?


கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத், காலை 6.35 மணிக்கு திருப்பூர் செல்லும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு. அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை அடையும். சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேரும். 


சென்னை டூ கோவை 


மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும். இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். இடையே, சேலம் ரயில் நிலையத்தை மாலை 5.48 மணிக்கு அடைந்து அங்கிருந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு அடைந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும். 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும். அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். 


மேலும் படிக்க | PM Modi: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி... சென்னை டூ நீலகிரி வரை - பக்கா பிளானில் திடீர் ட்விஸ்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ