தமிழ்நாட்டுக்கும் ஆளுநருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அறிஞர் அண்ணாவின் சொற்களான, ‘ஆட்டுக்குத் தாடி எதற்கு ; ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு’ என்ற அரசியல் சொலவடை பட்டிதொட்டியெங்கும் சென்றது. இந்தியாவிலேயே மாநில உரிமைகளை அதிகம் பேசிய, சொல்லப்போனால் முதலில் பேசிய மாநிலம் தமிழ்நாடு என்னும் வகையில், அந்த மாநிலத்தின் உரிமைகளில் தலையிடும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டா ? இல்லையா ? என்பது இப்போதுவரை விவாதமாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி


பிரிட்டன் காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாகவே ஆளுநர் என்ற பதவி இருந்து வருவதாக ஒரு தரப்பு கூறி வந்தாலும், இப்போதும் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவி இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு பதவியாக இல்லாமல் மாநில அமைச்சரவையின் முடிவுகளில் தலையிடும் அதிகாரம் அந்த பதவிக்கு உண்டா ?


தமிழ்நாட்டில் இந்தக் கேள்வியைச் சுற்றித்தான் அரசியல் சதுரங்க ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்துக்கொள்ளும் ஆளுநரின் போக்கை கண்டித்து தொடர்ந்து ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இதுபோதாதென்று, உச்சநீதிமன்றமும் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் ஆளுநர்களுக்கு சமீபத்தில் நடந்த விசாரணைளில் சில உத்தரவுகளை பிறப்பித்து ‘குட்டு’ வைத்தது. 


ஆனாலும் தொடர்ந்து மாநில அரசுகளுடனான ஆளுநர்களின் அதிகாரப் போட்டி இருந்துகொண்டே இருக்கிறது. ஆளுநர் மீதே இத்தனை சர்ச்சைகளைக் கடந்து வந்த நிலையில், ஆளுநர் மாளிகை மட்டுமென்ன ? சர்ச்சையில் சிக்காமல் இருக்குமா.!
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு வந்த பிரதமர், நேரு உள் விளையாட்டரங்கில் போட்டியைத் தொடங்கிவைத்துவிட்டு அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். ஏனென்றால், மறுநாள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக!


ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கியது அதிகாரப்பூர்வமாக மாநில அரசு செய்ய வேண்டிய கடமை. ஆனால், பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் தங்கிய இரவு நடந்தது என்ன ?


அன்றிரவு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பல பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடியை ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அங்கு அவருடன் ஆலோசனையிலும் ஈடுபட்டனர். இதுபோதென்று, அதிமுகவின் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்ஸும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு அப்பாயின்மெண்ட் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அன்றிரவு பாஜகவினரோடு மட்டும் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சம்பவத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ஓர் கேள்வியை ஆளுநர் மாளிகைக்கு முன்வைத்துள்ளார்.!  


மேலும் படிக்க | ஆளுநர் ரவிக்கு ‘திராவிட’ வகுப்பெடுத்த டி.ஆர்.பாலு!.


‘ஆளுநர் மாளிகையில் ஆளுநரோடனோ அல்லது மாநில வளர்ச்சி குறித்து முதல்வருனடோ ஆலோசனை நடத்தலாம். ஆனால், பாஜக கட்சியினரோடு ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது அதிகாரமீறல் ஆகாதா? இதற்குமுன் எந்த பிரதமராவது தனது கட்சியினரோடு ஆளுநர் மாளிகையை மிஸ் யூஸ் செய்திருக்கிறார்களா?’ என்று வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார். 



இதற்கான பதிலை பாஜகவினரோ, ஆளுநர் மாளிகையோதான் சொல்ல வேண்டும். சொல்வார்களா ?!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ