வேலூரை உலுக்கிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை - 4 பேர் மீது குண்டர் சட்டம்
வேலூரை உலுக்கிய பெண் மருத்துவர் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வேலூரில் கடந்த மார்ச் மாதம் 17-ஆம் தேதி காட்பாடியில் இருந்து வேலூர் செல்ல தனது ஆண் நண்பருடன் காத்திருந்த பெண் மருத்துவரை பயணிகள் ஆட்டோ தான் ஏறுங்க என ஏமாற்றி கடத்தி சென்றனர். சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாலாற்றில் வைத்து ஆண் நண்பரை அடித்து கையை காலை கட்டி போட்டுவிட்டு பெண் மருத்துவரை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டுத் தப்பியோடினர். இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினருக்கு இமெயில் மூலம் வரப்பெற்ற புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
அதில், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன், கூலி தொழில் செய்யும் பரத் (எ) பாரா, மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் 17 வது சிறுவன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். போச்சோ, கடத்தல், வழிப்பறி உட்பட 10 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வேலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | நிர்வாணமாக கிணற்றில் வீசிப்பட்ட பெண் சடலம் - வழக்கில் திடீர் திருப்பம்..!
இந்நிலையில் பெண் மருத்துவரைக் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணண் பரிந்துரைத்திருந்தார். அதனையடுத்து கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் உள்ள மணிகண்டன், சந்தோஷ்குமார் பார்த்திபன், பரத் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | காதலிக்கு செல்போன் வாங்கித் தருவதற்கு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR