மதுரை பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு- வீடியோ
ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து பாலமேடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாட்டுப் பொங்கல் பூஜைக்காக காளைகளை, அதன் உரிமையாளர்கள் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினர். பின்பு ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற காளைகளை, வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனர். அவற்றை சிலர் அடக்க முயன்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், காளைகளை அதன் உரிமையாளர்கள் திடீரென அவிழ்த்து விட்டதால், மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். எனினும், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை வதித்திருப்பதால், பாலமேட்டில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த காளைகளை அடக்க இளைஞர்கள் முயன்றனர். தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீடியோ பார்க்க:-