விழுப்புரம்: சிறுவன் இறந்த சம்பவத்தில் புதிய CCTV காட்சி வெளியீடு! சிக்கப்போகும் அந்த இருவர் யார்?
விழுப்புரத்தில் நான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒரு புதிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்த தள்ளுவண்டியில் கடந்த 14 ஆம் தேதி ஒரு சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தான். முதலில் பசியால் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியான நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, சிறுவனை இருவர் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது, 3-வதாக ஒரு சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில், சந்தேகத்திற்கிடமான இரு நபர்களும் சிறுவன் இல்லாமல் புதிய பேருந்து நிலையம் நோக்கி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ALSO READ | ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம்: கொலையா? தற்கொலையா?
இந்தக் காட்சிகளில் இருவரின் முகங்களும் ஓரளவு தெரிவதால், பொதுமக்கள் இதனைப் பார்த்து அடையாளம் தெரிந்தால் காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், தனிப்படை காவல்துறையினர், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து விழுப்புரம் பஸ் நிலையத்திற்குள் வந்து சென்ற பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் போலீசார் விசாரித்ததில் உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து வந்த அரசு பஸ்சில்தான் சிறுவனுடன் 2 பேரும் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், உளுந்தூர்பேட்டை பஸ் நிலைய சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சிறுவன் அணிந்திருந்த அங்கன்வாடி மைய சீருடையை வைத்து போலீசார் விசாரித்ததில், அந்த சீருடை விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கவில்லை என்றும், கடலூர் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களின் செல்போன் எண்களுக்கு சிறுவனின் புகைப்படம் மற்றும் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், சிறுவன் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR