விருத்தகிரீஸ்வரர் கோயில்: மகாசிவராத்திரியில் கலசங்கள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி
Virudhagireeshwarar Temple: பழம்பெரும் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் ஐந்து கோபுரங்கள், நந்தி, 5 கொடிமரம், 5 தேர், என அனைத்தும் ஐந்து ஐந்தாக உள்ளன. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகவும் பார்க்கப்படுகின்றது.
இத் திருக்கோயில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் நான்கு கால மண்டல பூஜை இங்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள கோபுரத்திலிருந்து மூன்று தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருடு போயுள்ளது தெரிய வந்துள்ளது. இன்று காலை கோவில் திறந்து உள்ளே பார்த்த பொழுது மூன்று கலசங்கள் திருட்டு போயிருந்தது பற்றி கோயில் ஊழியர்கள், பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் கண்டறிந்தனர்.
மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் இரவு காவலாளி இருக்கும் போதே கலசங்கள் திருட்டு போன சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
31/2 அடி கொண்ட கலசங்களின் மதிப்பு 14 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், இந்த கோயிலில் ஏற்பட்டிருக்கும் திருட்டு, ஊர் மக்களையும், கோயில் நிர்வாகிகள், பூசாரிகள் என அனைவரையும் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக கவுன்சிலர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR