அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக கவுன்சிலர்கள்

அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜேஷ் வெற்றி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 1, 2022, 11:05 AM IST
அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக கவுன்சிலர்கள் title=

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் திமுக அதன் கூட்டணி கட்சி சார்பில் 48 இடங்களுக்கும்,அதிமுக 48 இடங்களிலும் போட்டியிட்டன. இதனை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் திமுக 35 இடங்களில் வென்று தனி பெரும்பான்மை பெற்றது,இதேபோல் திமுக கூட்டணி சேர்த்து 43 இடங்களில் வெற்றி கண்டது.அதிமுக சார்பில் 4 இடங்களும் சுயேச்சை ஒருவரும் வெற்றிபெற்றனர்.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 14 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜேஷ் வெற்றி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரை சந்தித்து திமுகவில் இணைந்தார், மேலும் தனது காரிலிருந்து அதிமுக கட்சி கொடியை அகற்றி விட்டு திமுக கட்சி கொடியை பொருத்தி கொண்டார் இந்த காட்சிகள் வெளியாகி ஆவடியில் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி.. மேலும் ஒரு வழக்கு பதிவு

இதேபோன்று தற்போது அதிமுக சார்பில் 16 வது வார்டில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் மீனாட்சி ஆதிகேசவன், தனது கணவருடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரை நேரில் சந்தித்து அதிமுகவிலிருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.கட்சியில் இணைந்த அவர்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

அப்பொழுது பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுகவில் மகிழ்ச்சி. இது தாய் கழகம் தான் என கூறியவர்,உங்கள் வார்டுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியும் அளித்தார். 

ஆவடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி மாநகராட்சியில் அதிமுகவே இல்லை என்ற நிலையை திமுக உருவாக்க செயல்படுவதாக பேசபட்டு வருகிறது. ஆவடி மாநகரட்சியில் அதிமுக சார்பில் மீதம் 2 பேர் மட்டுமே கவுன்சிலராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அதிமுகவோடு இருந்தால் லாபம், இல்லையென்றால் இழப்பு -கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News