சசிகலா முன்னதாக வெளிவருவதில் சிக்கல்!! நன்னடைத்தை பொருந்தாது - கர்நாடக சிறை நிர்வாகம்
சசிகலா முன்கூட்டியே வெளியே வந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடும் எனத்தெரிகிறது.
பெங்களூரு: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி மற்றும் உதவியாளர் வி.கே.சசிகலா (VK Sasikala) ஆகஸ்ட் 14, 2010 அன்று பெங்களூரு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர் வியாழக்கிழமை ட்வீட் செய்திருந்தார். இவரின் பதிவை அடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தலைப்பு செய்திகளில் இவரைப்பற்றி தான் இருந்தது. கொரோனா நெருக்கடியிலும் வி.கே.சசிகலா (VK Sasikala in Prison) சிறைவாசம் பற்றி பேசப்பட்டது.
தற்போது நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா (Sasikala) , பிப்ரவரி 15, 2017 அன்று சிறை அதிகாரிகள் முன் சரணடைந்தார். பெங்களூருவில் ஒரு விசாரணை நீதிமன்றம் அளித்த சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் 2014 செப்டம்பர் மாதம் தீர்ப்பை உறுதி செய்த ஒரு நாள் கழித்து சிறைக்கு சென்றார்.
இந்த செய்தியும் படிக்கவும் | ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா
இந்த செய்தியும் படிக்கவும் | அதிமுக ஆட்சி அமைய காரணம் சசிகலா: செல்லூர் ராஜூ
பாஜக-வை சேர்ந்த டாக்டர் அசீர்வதம் ஆச்சரி (Dr Aseervatham Achary) நேற்று சசிகலா ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று ட்வீட் செய்திருந்தார்.
தற்போதைய முக்கிய செய்தி... திருமதி சசிகலா நடராஜன் 2020 ஆகஸ்ட் 14 ஆம் தேதி பெங்களூரில் உள்ள பரபன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார். மேலும் புதிய தகவலுக்கு காத்திருங்கள்" என்று பகிர்ந்திருந்தார்.
சசிகலா முன்கூட்டியே வெளியே வந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடும் எனத்தெரிகிறது.
ஆனால் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில், அவரின் தண்டனைக் காலம் முடியும் முன்பே வெளிவர வாய்பப்பு இருக்கிறது என செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை நிர்வாகத்திடம் இருந்து ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்பது தான் அந்த செய்தி.
தற்போது சிறைவாசம் அனுபித்து வரும் சசிகலா, அவரின் கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சசிகலா 2017 அக்டோபரில் ஐந்து நாட்கள் பரோலில் வெளியே வந்தார். பின்னர் மார்ச் 2019 இல், நடராஜன் காலமானபோதும், அவருக்கு 12 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இந்த செய்தியும் படிக்கவும் | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
இந்த செய்தியும் படிக்கவும் | சசிகலாவுக்கு சிறை சலுகை கொடுத்தது உண்மை: சிறை அதிகாரிகள் ஒப்புதல்
அ.தி.மு.கவின் பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (J. Jayalalithaa) மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் என மொத்தம் நான்கு பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2014-ம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதா 2016 டிசம்பர் ஆறாம் தேதியன்று மறைந்தார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையே 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் அடைக்கப்பட்டனர்.