நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,82,691 பேர் புதிதாக கொரோனா (Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டின் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 2,06,58,234 ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம் தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை முதல் மே 20 வரை அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


ALSO READ | சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் பிரிட்டனில் ₹2400 கோடி முதலீடு


இந்நிலையில் தொடர்ந்து கொரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனையில் தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள மு. க.ஸ்டாலின் (MK Stalin) ஈடுபட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு சில அறிவுறுத்தல்களை ஸ்டாலின் வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்., உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். மருத்துவ அவசர நிலை எனச் சொல்லக்கூடிய அளவுக்குத் தீவிரம் இருப்பதால் 'கட்டளை மையம்' ஒன்றை (War Room) உடனே தொடங்க தலைமைச் செயலாரிடம் உத்தரவிட்டுள்ளேன். ஆக்சிஜன் இருப்பு, படுக்கைகள் இருப்பு, தடுப்பூசி குறித்து தெரிந்துகொள்ள கட்டளை மையம் உதவும்'' என தெரிவித்துள்ளார்.


 



 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR