67 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன - எச்சரிக்கை!!
செல்வி ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது 2015 நவம்பர் 17 ஆம் நாள் நடு ராத்திரியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு, பெரும் அழிவை ஏற்படுத்தியது
செம்பரம்பாக்கம் ஏரி செய்திகள்: கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தலைநகரம் சென்னை உட்பட மாநிலத்தில் பல பகுதிகளில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னையை பொறுத்த வரை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால், அதனை சுற்றி உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரி தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ளன.
சென்னையை (Chennai) சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தற்போது வரை செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை என்றாலும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பிவிடக் கூடும். இதனால் செம்பரம்பாக்கம் ஏரி விராய்வில் நிரம்பிவிடும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதேநேரத்தில் தமிழக அரசும் (TN Govt) , சென்னை மாநகராட்சியும் போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு படை குழுவினர் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளனர்.
ALSO READ | பயப்பட வேண்டாம்! தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படாது
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடி ஆகும். தற்போது வரை செம்பரம்பாக்கம் (Chembarambakkam Lake) ஏரி 21 அடி வரை நிரம்பியுள்ளது.
நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு (Flood Alert) வெளியிடப்பட்டு, அதன் பிறகே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ALSO READ | சென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை
முன்னதாக செல்வி ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது 2015 நவம்பர் 17 ஆம் நாள் நடு ராத்திரியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு, பெரும் அழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR