சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் கனமழை பெய்தது. இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பாக்கு தென்னை உள்ளிட்ட மரங்கள் சூறைகாற்றில்  வேரோடு கீழே சாய்ந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.  மேலும் தாண்டவராயபுரம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தில் 3000க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் உள்ள நிலையில் அதில் ஊடுபயிராக தேன் வாழை , செவ்வாழை உள்ளிட்டவைகளையும் பராமரித்து வருகிறார், அப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பாக்கு மரங்களும், 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களும் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளது, அதேபோல் அதே பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாக்கு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?


இதனையடுத்து வீசிய சூறாவளி காற்றில் சொக்கநாதபுரம் தாண்டவராயபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மொத்தம் 800-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 200க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சாய்ந்ததால்  விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.  மேலும் தமிழக அரசும் அரசு அதிகாரிகளும்  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது தவிர வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை. மாநகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் ஓரங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி. முறையான கால்வாய் வசதி இல்லாததால் தெருவுக்குள் பெருக்கெடுக்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் இன்றும் 94 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தி வந்தது இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இன்று மாலையில் இருந்து வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்பாடி சத்துவாச்சாரி பாகாயம் அரியூர் அணைக்கட்டு கிரீன் சர்க்கிள் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை மற்றும் விதமான மழை பெய்ய தொடங்கியது. மாலை முதல் நள்ளிரவு வரை பரவலாக ஆங்காங்கே கனமழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து நீடித்ததன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.


குறிப்பாக வேலூர் மாநகரின் முக்கிய சாலையும் திருவண்ணாமலை ஆரணி செல்லும் சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி நின்றது. லட்சுமி திரையரங்க பேருந்து நிறுத்தத்தில் மழைநீர் வெளியேற போதிய கால்வாய் வசதி இல்லாததால் அதிகப்படியான தண்ணீர் சாலையில் தேங்கி நின்றது இதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன அதேசமயம் அருகில் உள்ள தெருவுக்குள் புகுந்த மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. சாலையில் தேங்கி நின்ற மழை நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதுசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தெருவுக்குள் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துதாலும் அத்தெருவை பயன்படுத்தும் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.


மேலும் படிக்க | திருநங்கைகளுக்கு சுயதொழில் செய்ய காவல்துறை ஏற்பாடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ