பெண்ணின் உயிரை பறித்த போலிஸ் வேன், பதைபதைக்கும் சிசிடிவி கட்சி
வாகனத்தை ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. அதுவும் அதிக வேகம் செல்வது என்பது கூடவே கூடாது. அது ஆபத்தில் முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
Road Accidents News: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கார் மீது போலீஸ் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற பெண் பலியாகினர். மேலும் 8 போலீஸ் உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தை ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. அதுவும் அதிக வேகம் செல்வது என்பது கூடவே கூடாது. அது ஆபத்தில் முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதேபோல தான் ஆரணி அருகே நடந்த ஒரு சம்வம் பெண்ணை காவு வாங்கியுள்ளது. அதேநேரத்தில் பலரை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளது.
வீடியோ பார்க்க:
கார் மீது போலீஸ் வேன் மோதிய சம்பவம் குறித்த வீடியோவை பார்த்தால், வேகமாக போலீஸ் வேன் செல்வதை பார்க்க முடியும். ஆனால் போலீஸ் வேன் செல்லும் பாதை சரியானதா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், வாகனங்கள் சாலையில் செல்லும் போது, இடதுபுறமாக தான் செல்ல வேண்டும். இந்த வீடியோவில் போலிஸ் வேன் வலதுபுறம் வேகமாக செல்வதைக் காணலாம். சட்டத்தை மதிக்க வேண்டிய போலிஸ் அதிகாரிகள் சாலை விதிகளை மதிக்கவில்லை என்பது வீடியோ காட்சிகள் மூலம் புலப்படுகிறது.
அதேநேரத்தில் சாலையில் சரியான பாதையில், அதாவது வலதுபுறமாக கார் வருகிறது. தற்போது இந்த விபத்துக்கு யார் காரணம் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள். இதுக்குறித்து காவல்துறை விளக்கம் அளிக்குமா? மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ALSO READ | உயிர் விலைமதிப்பற்றது! இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ
மக்களே எந்த வாகனத்தில் பயணித்தாலும், கவனமாக வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலைகவசம் அணிவது அவசியம். அதேபோல கார் உட்பட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது, சீட் பெல்ட் அணிவதும் அவசியம்.
அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுவது, சிக்னல் மற்றும் சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டிவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, எந்தவித எச்சரிக்கை சைகைகள் கொடுக்காமல் வாகனத்தை திருப்புவது, வளைவுகளில் முந்திச்செல்வது போன்ற காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. தயவுசெய்து இதுபோன்று தவறுகளை செய்ய வேண்டாம். அனைவரின் உயிர் விலைமதிப்பற்றது.
ALSO READ | தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; 2 பேர் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR