தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகிறது. தமிழ் தேசியக் கொள்கை கொண்ட தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்வார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோன்ற நிகழ்வு இந்த ஆண்டு பதினான்காம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பிட்டி தியாகராய அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் அழைப்பிதழ் பட்டியலில் பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அச்சிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | “பெண்களின் உதிரம் கொட்டுகிறது. இந்த நாடு உருப்படாது” - ரஜினிகாந்த் பேச்சு


ஆனால் இந்த அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயர் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் நேற்று சர்ச்சையாகிக் கொண்டிருந்தது. ஈழத் தமிழர்களுக்கான நினைவேந்தலில் முக்கியத் தலைவரான சீமானை அழைக்காதது ஏன் என நாம் தமிழர் கட்சியினர் பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு விவகாரம் தலைதூக்கியது.


மே 17 இயக்கத்தினர் இந்த நினைவேந்தலில் பங்கேற்க மாட்டார்கள் என அதன் தலைவர் திருமுருகன் காந்தி அறிவித்தார். அதற்கு காரணம் இந்த நினைவேந்தலுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அழைக்கப்பட்டதுதான். விருந்தாளர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் அழைப்பிதழில் அண்ணாமலை பெயரும் இருந்தது. இதனை சுட்டிக் காட்டி மே 17 நிகழ்வினை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.



அவர்களைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கொளத்தூர் மணி, அந்தப் பட்டியலில் இருக்கும் தலைவர்கள் சிலர் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அமைதியைத் தேடித்தர வேண்டும் என்ற அக்கறை இல்லாதவர்கள் என சாடியுள்ளார்.


மேலும் படிக்க | மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்துக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்ததா


இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லயோலா மணி, அண்ணாமலை வருவதால் நான் அந்த கூட்டத்திற்கு வரப்போவதில்லை என நேரடியாக அறிவித்துள்ளார். இப்படி தலைவர்கள் பலர் வரவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினர் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR