வருக வருக தமிழ்நாட்டுக்கு வருக - செஸ் ஒலிம்பியாட் பாடல் வெளியீடு
வெல்கம் டு சென்னை என்ற செஸ் ஒலிம்பியாட் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்திட தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அந்தவகையில் சென்னை நேப்பியர் பாலம் சதுரங்க போர்டு போல் மாற்றப்பட்டிருந்தது.
மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது. வருகிற 25ஆம் தேதி முதல் 5 பேருந்துகள் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்லும். 1 மணி நேரத்துக்கு ஒரு தடவை இலவச பேருந்துகளின் சேவை இருக்கும். சென்னை மத்திய கைலாஷில் இருந்து இயக்கப்படும் இந்தப் பேருந்துகளானது ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றடையும். இந்த பஸ்கள் எஸ்.ஆர்.பி.ஸ்டூல்ஸ், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உள்ளிட்ட 19 இடங்களில் நின்று செல்லும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு கடந்த 7ஆம் தேதி இந்த சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி வெளியிட்டார்.
இந்நிலையில், "வெல்கம் டு சென்னை" என்ற செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை இசையமைப்பபாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று வெளியிட்டார். இந்தப் பாடலில் முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். பாடலை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் படிக்க | போலீஸ் கஸ்டடியில் இருந்த குற்றவாளி தப்பி ஓட்டம் விடிய விடிய போலீஸ் தேடுதல் வேட்டை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ