சென்னை: கொரோனா (COVID-19) தாக்கம் மாநிலத்தில் எப்போது முடிவடையும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவுதல் தமிழ்நாட்டில் (Tamil Nadu Coronavirus) எப்பொழுது கட்டுப்படுத்தப்படும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் கூறியது, "கொரோனா வைரஸ் (Coronavirus) பரவாமல் தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். COVID-19 வைரஸ் எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு பரவுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. மருத்துவ நிபுணர்கள் சொல்வதை தான் நாம் பின்பற்ற வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்து இல்லை. அது (Coronavirus) எப்போது இங்கிருந்து செல்லும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.


மேலும் செய்தி படிக்க | சிவப்பு நிற கண் கொரோனா தொற்றுக்கான முதல் அறிகுறியாகும்!!


கொரோனா வைரஸ் (Coronavirus) பரவாமல் தடுக்க மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பையும் முதலமைச்சர் நாடினார்.


"மக்கள் சென்னையை (Chennai) விட்டு வெளியேறக்கூடாது" என்று முதல்வர் கூறினார்.


ஊரடங்கு (Lockdown) மேலும் நீட்டிக்கப்படுமா? என்று கேட்டதற்கு, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று முதல்வர் கூறினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் அதிகபட்சமாக சோதனைகளை நடத்தியதாக முதல்வர் கூறினார்.


மேலும் செய்தி படிக்க | மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என ராகுல் காந்திக்கு அமித் ஷா அட்வைஸ்..!


தமிழக முதல்வர் வேலாச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனை பார்வையிட முதல்வர் வருகை தந்தார். அப்பொழுது அவரிடம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறித்து கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.