நீலகிரி மாவட்டம் உதகையில் பொது விநியோகம் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சி தலைவர் அருணா மற்றும் மாவட்ட பொது விநியோக திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளின் செயல்பாடுகள், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் உள்ள இடையூறுகள் குறித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமச்சந்திரன் தமிழகத்தில் தற்போது மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருப்பதாகவும் ஒன்றிய அரசு வழக்கமாக வழங்கி வந்த மண்ணெண்ணெய் அளவை வெகுவாக குறைத்ததால் நீலகிரிக்கு வந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் அளவு வெகுவாக குறைந்துள்ளதால் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | “பொய் பிரச்சாரம்” திமுக-வை கலாய்த்தாரா விஜய்?!


மேலும் இது குறித்து தமிழக முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் பொருள் தட்டுப்பாடு இல்லை என்றார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தபட்டுள்ள இ-பாஸ் நடைமுறை கால அவகாசம் முடிவடைந்த பிறகு மீண்டும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது ஐஐடி மற்றும் ஐஏஎம் குழுவினர் நீலகிரி மாவட்டத்தின் தாங்கும் திறன், தினந்தோறும் எவ்வளவு சுற்றுலா பயணிகள் வரலாம், அவர்களுக்கான உணவு, தங்குமிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யலாம் என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் அந்த பணிகள் சுமார் 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்திற்குள் நிறைவடைந்து அது குறித்த அறிக்கையை சமர்ப்பித்த உடன் இபாஸ் நடைமுறை தளர்வு குறித்து உத்தரவு வரும் என்றார்.


மேலும் நிதி ஆதாரத்திற்கு ஏற்ப உதகை சேரிங் கிராஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் தற்போது உதகையில் நடைபெற்று வரும் மார்க்கெட் கட்டுமான பணி முடிவடைந்த உடன் குன்னூரில் மார்க்கெட் கட்டுமான பணி தொடங்கப்படும் என்றும் உதகையில் மல்டி பார்க்கிங் வசதி செய்யப்படும் என்றும் குன்னூர் அருகே டைட்டில் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது தமிழக சுற்றுலா துறையின் வருவாய் அதிகரித்திருப்பதாகவும் வழக்கமாக சுற்றுலா துறைக்கு வரும் வருவாயை சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு வழங்கபடும் நிலையில் கடந்த ஆண்டுகளில் ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாய் ஈவு தொகையாக அரசுக்கு வழங்கபட்டு வந்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு 12 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக தமிழக சுற்றுலாத்துறை கீழ் இயங்கும் ஹோட்டல்கள் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.


மேலும் சுற்றுலாத்துறைக்கு என 2023 ஆண்டு புதிய கொள்கை கொண்டு வந்துள்ளதாகவும் அதன்படி தமிழகத்தில் 300 இடங்கள் சுற்றுலா தளங்களுக்காக கண்டறியப்பட்டு அதற்காக தனி மாஸ்டர் பிளான் கொண்டு வந்து அதில் சில இடங்கள் சுற்றுலா தலங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி செலவில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக கூறிய கா. ராமச்சந்திரன் அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த குழு அந்தந்த மாவட்டங்களில் இடங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியுடன் அவற்றை எடுத்து சுற்றுலாத்தலங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ