சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் எவ்வாறு கணக்கீடு செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு (Government of Tamil Nadu) சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது தமிழ்நாட்டில் ஓரிரு நாள்களில் பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை அல்லது நாளை மறுநாள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (12th Board Exam) முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 


ALSO READ | Class 12 Exams: மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு


முன்னதாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை (TN School) நடவடிக்கை எடுத்து வருகிறது.


12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீடு செய்முறை (class 12 exams marks calculation):


- 10 வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.


- 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும், தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். 


- 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% கணக்கிடப்படும்.


இந்த முறையில் கணக்கீடு செய்யப்படும் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக மாணவர்கள் கருதினால், அவர்களுக்கு விருப்பம் இருந்தால், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத வாய்ப்பளிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR