சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்திலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) செய்தியாளர் சந்திப்பில் பேசினார். 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீடு குறித்த சுமார் 12 வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு வழிமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இறுதியாக தற்போது வெளிவந்த முறையை நிபுணர் குழு முடிவு செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.
பத்தாம் வகுப்பில் மாணவர்கள் தேர்வு எழுதிய போது, சூழல் சாதாரணமாக இருந்தது. வழக்கமான ஆரோக்கியமான சூழலில் மாணவர்கள் தேர்வை எழுத முடிந்தது. ஆகையால் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு அதிக பங்கு (50%) அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில் எந்த பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ, அந்த மூன்று பாடங்களுக்கான மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றார் அன்பில் மகேஷ்.
தனியாக 12 ஆம் வகுப்புக்கு (Class 12 Exams) தயார் செய்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களோடு சேர்த்து தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நன்றாக படிக்கும் மாணவர்கள், சுமாராக படிக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் நியாயமாக இருக்கும் வகையில், இந்த விகிதாச்சார முறையை தேர்ந்தெடுக்க முதல்வர் முடிவெடுத்தார் என அன்பில் மகேஷ் கூறினார்.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீடு செய்முறை பின்வரும் வகையில் இருக்கும்.
- 10 வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
- 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும், தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தெர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% கணக்கிடப்படும்.
- 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
- இந்த முறையில் கணக்கீடு செய்யப்படும் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், அவர்களுக்கு விருப்பம் இருந்தால், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத வாய்ப்பளிக்கப்படும்.
- கொரோனா தொற்று பரவலின் தீவிரம் குறைந்தவுடன் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.
- கல்லூரி சேர்க்கைக்கான காலமும் நெருங்குவதால், இந்த தேர்வுகளை விரைவில் நடத்த அரசு முயற்ச்சி செய்யும்.
- ஏற்கனவே 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.
- மாணவர்கள் 10, 11 ஆம் வகுப்புகளில் (Class 11) பெற்றுள்ள மதிப்பெண்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
ALSO READ: பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR