மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும்? என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 


இந்நிலையில், கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோடீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உறுதி அளித்தார். 


இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 6-ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்? என்பதையும் அறிக்கையில் குறிப்பிடும்படி உத்தரவு பிறப்பித்து விசாரணையை வைத்தது.