யார் யாருக்கு கொரோனா சோதனை அவசியம்... அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் பிடி குறையவில்லை. இந்நிலையில் யார் யார் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் பிடி குறையவில்லை. இந்நிலையில் யார் யார் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் சாதாரண காய்ச்சலோ, இருமலோ இருந்தால் அதற்காக கொரோனா சோதனை செய்ய வேண்டும் என மக்களை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் குறிப்பிடுகையில்., மத்திய அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் நமக்கு கொரோனா வைரஸ் சோதனை தொடர்பான வழிமுறைகளைத் தெரிவித்துள்ளனர். அதன்படி காய்ச்சலோ, இருமலோ இருந்தால் மக்கள் அச்சப்பட வேண்டாம். எல்லா இருமலும், எல்லா காய்ச்சலும் கொரோனாவுக்கான அறிகுறி இல்லை.
கடைசி 14 நாள்களில் கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு காய்ச்சலோ, இருமலோ இருந்தால் அவர்கள் மருத்துவரை அனுகலாம். தேவையிருந்தால் ம
ருத்துவர்கள் அவர்களுக்கு சோதனை செய்வார்கள். ஒவ்வொரு காய்ச்சலுக்கும், ஒவ்வொரு இருமலுக்கு சோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடையே கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுவதில் முழுவீச்சில் இருக்கும் அமைச்சர், தமிழகத்தில் 5-வது கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் அமைக்க அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா பரிசோதனை மையம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்றும், கொரோனா சோதனை மாதிரிகளை சோதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 209 எட்டியுள்ளது. தமிழகத்தில் 4 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன., இதில் ஒருவர் சிகிச்சையளிக்கு மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள கொரோனா சோதனை மையங்கள் பட்டியல்
கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரீவென்டிவ் மெடிசின் & ரிசர்ச், சென்னை
அரசு மருத்துவக் கல்லூரி, தேனி
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
அரசு மருத்துவக் கல்லூரி, திருவாருர்
அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்