அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும்... சசிகலா சொல்வது என்ன?
அதிமுகவை வழிநடத்துவது தொடர்பாக அந்தியூரில் சசிகலா பேசியிருக்கிறார்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்துவருகிறார். இதற்கிடையே கட்சிக்குள் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.
ஆனால் சசிகலாவை கட்சிக்குள் விடுவதில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் விட்டால் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் மீண்டும் கட்சிக்குள் எழுந்துவிடும் என கொங்கு மண்டல நிர்வாகிகள் நினைப்பதாக கூறப்படுகிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி துணையோடு கட்சிக்குள் கொங்கு மண்டல நிர்வாகிகளின் ஆதிக்கம் அதிகளவு இருப்பதால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வர சசிகலா மட்டுமே ஒரே அஸ்திரம் என ஒரு தரப்பு நினைப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில் சசிகலா தற்போது மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு எடப்பாடியில் பேசிய சசிகலா அதிமுக ஆட்சியை அமைத்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அத்தாணி பிரிவில் இருக்கும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் படிக்க | தீர்ப்புக்கு பிறகு எடப்பாடியில் சசிகலா எடுத்த சபதம்... ஆதரவாளர்கள் ஆரவாரம்
அதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளித்துவருவற்கு நன்றி. எம்ஜிஆர்,ஜெயலிலதா வழியில்தான் எனது பயணம் இருக்கும். எனக்கென தனி பாதை கிடையாது.அதிமுகவை யார் வழி நடத்த வேண்டும் என கட்சியில் இருக்கும் உள்ள ஒன்றறை கோடி தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் படிக்க | மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்...பாஜகவுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR