சென்னை: தமிழகத்தின் ஆளுமையாகக் கருதப்பட்ட முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி (Karunanidhi) மற்றும் ஜெயலலிதா (Jayalalithaa) மறைந்த பின்னர் தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை. அவர்களின் வழியிலேயே கட்சி தொடர்ந்து செயல்படுகிறது என வெற்றிடம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் (Tamil Nadu Political) மாற்றம் இன்றியமையாதது. எனவே ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியை தொடங்குவதாகக்கூறி ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே, நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களுடன் பேசினார். ஒருபோதும் தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன். நிச்சயமாக நான் அரசியலுக்கு வருவது என உறுதி அளித்துள்ளார்.


அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், திமுக (DMK) மற்றும் அதிமுக (AIADMK) தலைமையில் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உட்பட ஒரு சில கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். 


ALSO READ |  Rajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி


இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) கட்சி ஆரம்பிக்கும் நிலையில், தமிழகத்தின் பெரும் ஆளுமையாக இருக்கும் அதிமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் ரஜினி கூட்டணியில் சேரலாம். தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ரஜினியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா? அல்லது அதிமுக கூட்டணியில் தொடருமா? என பல கேள்விகளுக்கு வரும் காலங்களில் பதில் கிடைக்கப்பெறும். 


துக்ளக் (Thuglak) பத்திரிக்கையின் ஆசிரியர் ஒரு தொலைக்காட்சி ஊடகத்திடம் பேசும் போது,  ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைந்த பின்னர் தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் வெற்றிடம் உள்ளது. ரஜினிகாந்த் உடன் இணைவதற்கு பாஜகவுக்கு அறிவுறுத்தப்படும். அதேநேரத்தில் அதிமுக பொருத்தமான முடிவை எடுக்கவில்லை என்றால், அக்கட்சிக்கு பெரும் இழப்பை சந்திக்க நேரிடலாம் எனக் கூறியுள்ளார். 


ALSO READ |  Big Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி


முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினி தனது 2017 நிகழ்வை நினைவு கூர்ந்தார். அப்பொழுது அரசியல் கட்சியைத் தொடங்குவது என்றும், சட்டமன்றத் தேர்தலை (TN Assembly Elections in 2021) எதிர்கொள்வது மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவது குறித்து பேசியிருந்ததை நினைவுக்கூறிய அவர், இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னர் பொதுமக்களை சந்திக்க விரும்பியதாகவும், பின்னர், கோவிட் -19 தொற்று காரணமாக சந்திக்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும் தனது அரசியல் இயக்கத்தை முன்னெடுக்கும் மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட வேண்டும் என காத்திருந்ததாகவும் கூறினார்.


கோவிட் -19 (COVID-19) காரணமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால், அவர் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறியதை நடிகர் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார். 


அவர் சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​தமிழ் மக்களின் பிராத்தனை காரணமாக மீண்டும் உயிர் பிழைத்தேன். தற்போது கோவிட் -19 காரணமாக பெரிய ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எனக்கு அறிவுறுத்தினர். ஆனால் மக்களின் நலனுக்காக என் உயிரே போனாலும் எனக்கு கவலையில்லை. அது எனக்கு மகிழ்ச்சி தான் எனக்கூறினார். 


ALSO READ |  இந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை


தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்ற வேண்டிய நேரம் இது என்றும், தேர்தலில் நான் வெற்றி பெற்றால், அது என்னுடைய வெற்றியல்ல, மக்களின் வெற்றி என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் (Tamilaruvi Manian) நியமிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்த ரஜினி, தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியை (Arjuna Moorthy) அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் தன்னுடன் இருப்பது மிகப்பெரிய பலம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.


இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்ற எண்ணத்துடன் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR