சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைக்குமா? சிபிஐ கேவியட் மனு தாக்கல்
சி.பி.ஐ. தரப்பு நியாயங்களை கேட்காமல், உச்ச நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறது சி.பி.ஐ.
12:42 21-08-2019
இன்று ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில், நீதிபதி என்.வி.ரமணா ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்ததுடன் தலைமை நீதிபதி முடிவு எடுப்பார் எனக் கூறினார்.
சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அயோத்தி வழக்கில் பிஸியாக உள்ள தலைமை நீதிபதி, இந்த ஜாமீன் மீதனா வழக்கை விசாரிப்பாரா? இல்லை வேறு ஒரு நீதிபதிக்கு பரிந்துரை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், சி.பி.ஐ. தரப்பு நியாயங்களை கேட்காமல், உச்ச நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறது இந்திய புலனாய்வு துறை.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்யாமலிருக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்பொழுது இருதரப்பு வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியது. இதனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் இல்லை என்று அறிந்தனர். அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரம் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இதையடுத்து, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை மீண்டும் சென்றது. ஆனால் அவர் அங்கு இல்லை