TN Lok Sabha Elections 2024: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகளால் தமிழகத்தில் மும்முனை போட்டி என்பது உறுதியாகி உள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி கட்சிகளே தற்போதும் போட்டியிடுகின்றன. கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே கூட்டணியை அமைத்திருக்கிறது இந்த நாடாளுமன்ற தேர்தலில். 


தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையிலும் இந்த தேர்தலில் அதிமுகவை தன்னுடன் இணைத்து களம் காண வேண்டும் என எண்ணிய பாஜக, கடந்த வாரம் வரை பாஜகவில் கூட்டணியில் முக்கியமாக இடம் பெறுவார்கள் என்று சொல்லப்பட்ட அதிமுகவிலிருந்து பிரிந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடக்காத நிலையில் பிரதமர் மோடி இரண்டு முறை தமிழகம் வந்த போதும் மற்ற கூட்டணி கட்சியினரை மேடையில் காண முடிந்தாலும் சம்பந்தப்பட்ட இந்த இருவரையும் மேடையிலையோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பிரதமர் சந்திக்கவில்லை.


அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதியுடன் இருந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த ஒரு கட்சியும் இதுவரை இணையவில்லை பாமகவுடனும் தேமுதிகவுடனும் கூட்டணி குறித்து ஆலோசனைகள் நடந்த போதும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.


இதற்கிடையே தில்லியில் இருந்து பாஜக தேசிய தலைமை மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி இருக்கிறது. இந்த குழுவானது கூட்டணி பேச்சு வார்த்தையை முன்னெடுத்து நடத்தி கொண்டிருக்கிறது. 


மேலும் படிக்க | CAA சட்டத்திற்கு அதிமுக ஏன் ஆதரவு கொடுத்தது? எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விளக்கம்


அதிமுக பாஜக கூட்டணிக்கு வராது என்பதை உறுதிப்படுத்திய இந்த குழு கூட்டணி பேச்சுவார்த்தையை வேகம் காட்ட துவங்கியிருக்கிறது. ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்கி உள்ளது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, சரத்குமார் தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நேற்று பாஜகவுடன் இணைத்தார்.


சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டது. இதில் பாஜக தரப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது.,


“நாடாளுமன்ற தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்று உள்ளதால் மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. ஒரே இடத்தை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து பேசி ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும். விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம். இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என கூறினார்.


மேலும் படிக்க | பாஜகவுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி! CAAவை வரவேற்கும் இந்து மக்கள் கட்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ