ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் கிடைக்குமா? தேர்தல் ஆணையம் ரியாக்ஷன்!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பொது தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் வேண்டும் எனக்கோரி அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியிருந்தார். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் ஜிகே வாசன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலைபோல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபல் ஆஜராகினார். அவர், ஆணையத்திடம் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த மனுவில் குறைகள் இருப்பதாகவும், அதனால் அந்த குறைகளை சரி செய்து மீண்டும் அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என கூறினார்.
மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கபடும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ் மாநில காங்கிரசின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் சின்னத்தை வேறொரு அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துவிட்டது. இதனால் அதிருப்தியில் இருக்கும் நாம் தமிழர் கட்சி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. இருப்பினும் இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், அப்படியான பிரச்சனை ஏதும் தங்கள் கட்சிக்கு வந்துவிடக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.
மேலும் படிக்க | திமுக மக்களிடம் நம்பிக்கை இழந்து வருகிறது - அதிமுக வைகைச் செல்வன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ