பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 23, 2024, 06:21 AM IST
  • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்
  • தனித் தேர்வர்கள் நாளை முதல் பதிவிறக்கலாம்
  • வழிகாட்டுதலை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி? title=

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் கொடுக்கப்படும் நிலையில், இந்த பொதுதேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி? என்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தின் வாயிலாக ஹால் டிக்கெட்டுகளை தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ராமர் பாண்டியர் கொலை வழக்கு! தேவர் ஜெயந்தி 2012-ல் இருந்து பகை! 5 பேர் சரண்!

தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் தோன்றும் பக்கத்திலுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பப்ளிக் எக்ஸ்சாமினேசன் மார்ச் / ஏப்ரல் - 2024 ஹால் டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண், நிரந்த பதிவெண், மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்களுக்கான செய்முறைப் பயிற்சி

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மார்ச் / ஏப்ரல் - 2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இதுவரை சல்லி பைசா கூட தரவில்லை.. மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது -அமைச்சர் தங்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News