திமுக மக்களிடம் நம்பிக்கை இழந்து வருகிறது - அதிமுக வைகைச் செல்வன்!

அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி சரித்திரம் படைக்கும். அதிமுக இரண்டு கோடி தொண்டர்களுடன் சிறந்த கட்டமைப்போடு உள்ளது - வைகைச் செல்வன்  

Written by - RK Spark | Last Updated : Feb 21, 2024, 10:40 AM IST
  • திமுகவின் எம்பி-க்கள் தொகுதிக்கே வந்ததில்லை.
  • ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போட்டது இல்லை.
  • எந்த மக்கள் பணியையும் அவர்கள் ஆற்றவில்லை.
திமுக மக்களிடம் நம்பிக்கை இழந்து வருகிறது - அதிமுக வைகைச் செல்வன்! title=

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் நிச்சயமாக அவர்களுக்கு எதிரான வாக்குகள் அதிமுக பக்கம் வரும் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்.  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வரும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித்தேர் இழுத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2024: குடிசையில்லாத் தமிழ்நாட்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற வெள்ளித் தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்,கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிராம பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் மென்மேலும் வளர வேண்டும், மீண்டும் அதிமுக ஆட்சியில் மலர வேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டு வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

வெள்ளித்தேர்களுக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். வெள்ளி தேர் உற்சவத்தை முன்னிட்டு வருகை தந்த பக்தர்களுக்கு அதிமுகவினர் அன்னதானங்களையும் வழங்கினார்கள். வெள்ளி தேர் வழிபாட்டிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி சரித்திரம் படைக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, யார் கூட்டணிக்கு வர இருக்கிறார்கள் என்பது குறித்த விடையை கழகத்தின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியார் அவர்கள் தெரிவிப்பார்கள் நல்ல தகவல்கள் மகிழ்ச்சியான செய்தி விரைவில் தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பப்பட்டார்கள். 39 பேர் அந்த தொகுதிக்கே வந்ததில்லை, அந்த தொகுதிகளில் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போட்டது இல்லை, எந்த மக்கள் பணியையும் அவர்கள் ஆற்றவில்லை. மக்களிடத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள், நிச்சயமாக அவர்களுக்கு எதிராக வாக்குகள் திரும்பும், அந்த எதிரான வாக்குகள் எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் வரும்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முழுமையாக இருக்கிறது இரண்டு கோடி தொண்டர்களை பெற்று இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்றைய தினம் பூத் கமிட்டி, பாசறை அமைப்பு, மகளிர் அமைப்பு, என்று சிறந்த கட்டமைப்போடு இருக்கின்றது ஆக இந்த கட்டமைப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆக சட்டை வாங்க வேண்டும் என்பது ஆசை சட்டையை எப்படி வாங்குவது என்பது குறிக்கோள் சட்டை எப்படி இருக்க வேண்டும் அரக்கையா முழுக்கையா, கோடு போட்டதா, கலரா, என்பதையெல்லாம் திட்டம் விடுவோம் அல்லவா அது குறிக்கோள், குறிக்கோளோடு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுகிறது என வைகைச் செல்வன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News