எல்லோரையும் பார்க்குறிங்களே திருமாவளவனை பார்ப்பிங்களா?... ஜீ தமிழ் நியூஸ் எழுப்பிய கேள்விக்கு மழுப்பிய அன்புமணி
அனைத்து தலைவர்களையும் பார்க்கும் நீங்கள் திருமாவளவனை பார்ப்பீர்களா என ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் மழுப்பலான பதிலளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இந்த பொதுக்குழுவுக்கு ஜி.கே.மணி தலைமை தாங்க, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.
இதற்கிடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தலைவராக பணியாற்றிய ஜி.கே. மணிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தச் சூழலில் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டு பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க மற்றொரு தரப்பினர் விமர்சித்துவருகின்றனர். மேலும், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என விமர்சிக்கும் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் தற்போது செய்திருக்கும் வேலைக்கு பெயர் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஆனால் விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாத அன்புமணி ராமதாஸ் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினையும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் படிக்க |கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான தேர்வுக்குழு அமைப்பு
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் அவரிடம்,‘சமூக நீதி பேசும் நீங்கள் திருமாவளவனை சந்திப்பீர்களா’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அன்புமணி, மூத்த தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பேன் என்றார். தொடர்ந்து, அந்த மூத்த தலைவர்கள் பட்டியலில் திருமாவளவன் இருக்கிறாரா என எழுப்பப்பட்ட அடுத்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பார்க்க போறீங்க” என மழுப்பலாக பதிலளித்தார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் ஆரம்பத்தில் பேசிய அன்புமணி, “ முதல்வர், எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். இன்று பாமக சார்பில் 34 துணை அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், செயலாளர்களை சந்தித்து செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
2.0 சம்பந்தமான உத்திகளை, வியூங்களை அமைக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. பாமக வின் அணுகுமுறை வேளாண், நீர் வேளாண், கால நிலை மாற்றம், மது சார்ந்த பிரச்சனை, போதை பழக்கம், ஆன்லைன் சூதாட்டம்,வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் நோக்கம்,சமூக நீதி சார்ந்த பிரச்சனை ஆகியவற்றை மையப்படுத்தி எங்களது அணுகுமுறை இருக்கும்” என்று கூறியிருந்தார்.
மேலும் படிக்க | நடுக்கடலில் தங்க கட்டிகளுடன் சிக்கிய கும்பல் - இலங்கை டூ தமிழ்நாடு என்ன நடக்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR