கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான தேர்வுக்குழு அமைப்பு

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான நபரைத் தேர்வு செய்ய மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   

Written by - Chithira Rekha | Last Updated : May 29, 2022, 02:01 PM IST
  • கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது
  • விருதாளரைத் தேர்வு செய்ய எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு
  • தேர்வுக்குழுவில் நாசர், கரு.பழனியப்பன் ஆகியோருக்கும் இடம்
 கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான தேர்வுக்குழு அமைப்பு title=

தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில், செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். 

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் வழங்கப்படும் எனவும், இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.பத்து லட்சம் பரிசும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும் படிக்க | இந்தி திணிப்பை எதிர்ப்போம் - கலைஞர் சிலையில் இடம்பெற்றிருக்கும் மாஸ் கட்டளைகள்

Kalaigar kalaithurai vithagar award Jury Committe

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விருதாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவினை தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனைத் தலைவராகக் கொண்டு செயல்படும் இக்குழுவில் நடிகர் நாசர், இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

மேலும் படிக்க | காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது: நீதிமன்றம் காட்டம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News