`மதுக்கடைகள்` மூடப்படும் - வெளியான அறிவிப்பு
புதுச்சேரியில் ஜனவரி 15 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் மதுக்கடைகள், பார்கள், ஹோட்டல்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொங்கல் பண்டிக்கைக்கு சில விலக்குகள் இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே அரசு முடிவெடுக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | "நான் ரெடி" என்னோடு வருவதற்கு அமைச்சர் ரெடியா? முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கூட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படு நடத்தப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இருப்பினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார் என அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், பொங்கல் விழா, மக்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டாடுவார்கள் என்பதால், அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில அரசு பொங்கல் பண்டிகையையொட்டி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் மதுபானக்கடைகள், பார்கள், மதுபானங்கள் உள்ள ரெஸ்டாரண்டுகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜெயந்திக்காக இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக புதுச்சேரி அரசு விளக்கமளித்துள்ளது.
ALSO READ | கோவையில் துயர சம்பவம்; தாயும் மகளும் தற்கொலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR