நீங்க ஜெயிச்சதுக்கு எங்க பாலிடிக்ஸ் தான் காரணம் உண்மையை போட்டுடைத்த அதிமுக
Winning Erode East vs AIADMK: ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகே வென்றது எங்க பாலிடிக்ஸ் தான் காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
தி.மு.க.வின் தற்போதையை வெற்றி திமுகவின் சாதனை அல்ல எனவும், அதிமுகவின் பலவீனத்தினால் திமுக வென்றுள்ளதாக கே.சி.பழனிச்சாமி.கோவையில் தெரிவித்துள்ளார அஇஅதிமுக முன்னாள் கே.சி.பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தல் முடிவு என்பது அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவமாக இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி கருத்து தெரிவித்தார்.’
எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்றதன் பிறகு அதிமுக தொடர்ந்து, மீண்டும் மீண்டும் தோல்வியை சந்தித்து வருகிறது என அவர் தெரிவித்தார். பாஜகவிற்கு அதிமுக அடிமைப்பட்டு விட்டது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைந்தது துணை பிரதமராக வரக்கூடும் என்று கூறிய அவர், அதிமுகவில் அண்ணாமலையின் தலையீட்டை பிரதமர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க | இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய சுயநலத்தை மறந்து, ஒன்றுபட்ட அண்ணா திமுகவை உருவாக்க வேண்டும். நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் எடப்பாடி நடத்திய பொதுக்குழுவை கலைத்துவிட்டு, கட்சியில் ஆரம்பக் காலத்தில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதிமுகவின் பொறுப்புகளில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறிய கே.சி.பழனிச்சாமி, அதிமுக வலிமையான கட்சி தான் அதில் மாற்று கருத்து கிடையாது என்று கூறினார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என்கின்ற இரண்டு சுயநலவாதிகளால் இந்த இயக்கம் சிக்குண்டு கிடைக்கிறது. தற்பொழுது வென்றுள்ளது திமுகவின் சாதனை அல்ல அதிமுகவின் பலவீனத்தினால் திமுக வென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஈரோடு: இளங்கோவன் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம்; நாம் தமிழர் வாக்குகள் விவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட தென்னரசு ஏற்கனவே அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு சுற்றுகளில் கூட அவர் முன்னிலை பெறவில்லை. அனைத்து சுற்றுகளிலும் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்த இளங்கோவன் 1,10, 556 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதிமுகவின் தென்னரசு 43, 981 வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், அதிமுகவின் மோதலினால் ஏற்பட்ட சரிவு இது என்று அதிமுகவினரே வெளிப்படையாக குற்றம்சாட்டிக் கொள்கின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்னடைந்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக செல்ல இருக்கிறார்.
மேலும் படிக்க | பட்டாசு மற்றும் இனிப்பு: கொண்டாட்டத்தில் திமுக கூட்டணி; ஒதுங்கிய அதிமுக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ