கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்திறங்கிய பெண்ணிடம் இருந்து பல்வேறு வகையான 22 பாம்புகளை பறிமுதல் செய்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.  அவர் கொண்டு வந்த பல பிளாஸ்டிக் பைகளில் பாம்புகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும், அவரிடம் இருந்த பொருட்களில் இருந்து ஒரு பச்சோந்தியும் கைப்பற்றப்பட்டது.  இந்த சம்பவத்தை சென்னை சுங்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை உறுதி செய்தது.  "28.04.23 அன்று, கோலாலம்பூரில் இருந்து AK13 விமானத்தில் வந்த பெண் ஒருவரை சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரது பொருட்களை ஆய்வு செய்ததில், பல்வேறு வகையான 22 பாம்புகள் மற்றும் ஒரு பச்சோந்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. 1962 r/w வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 கீழ் அவரிடம் இருந்து பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று  ட்விட்டரில் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | King Cobra Attack: சுற்றுலா பயணிகள் மத்தியில் என்ட்ரியான ராஜநாகம்..! செம ஷாக் - வைரல் வீடியோ



இதன் காரணாமாக வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்குள் நுழையும் அவர்கள் மீது தமிழக வனத்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.  இந்த வகை பாம்புகளுக்கு சந்தையில் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கு கடத்தப்பட்டதாக ஆதாரங்கள் IANS இடம் தெரிவித்தன. சில சந்தர்ப்பங்களில், இந்த இன வகை பாம்புகள் வட இந்தியாவின் டெல்லி, லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் போன்ற சில பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதாக கூறி உள்ளனர்.  



சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகள் நீண்ட கம்பியைப் பயன்படுத்தி பாம்புகளை கவனமாக வெளியே எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடந்து வரப்படும் தங்கம் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், 22 பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ