பேருந்தில் பாலியல் சீண்டல்: வேறலெவலில் சிகிச்சை கொடுத்த சிங்கப்பெண்!
பேருந்தில் பின் இருக்காயில் இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 40 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெண் வக்கீல் ஒருவர் தனது தாயுடன் வேலுரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்றுள்ளார்.
வேலூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி அதன் இருக்கையில் தனது தாயுடன் அமர்ந்துள்ளார். பேருந்து கிளம்பி வானகரம் வரை சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பெண் வக்கீல் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் பின்னால் அமர்ந்திருந்த ஆண் முன்னிருந்த இருக்கை இரண்டிற்கும் நடுவே கையை விட்டு பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | அட இத கவனிக்காம விட்டாச்சே! பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் சமந்தா?
இதனால் தொந்தரவுற்ற பெண் வக்கீல் அவரது நடவடிக்கையை வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அவர் அந்த ஆணின் கையை தான் வைத்திருந்த ஊசியால் குத்தி தாக்கியுள்ளார்.
அதையும் அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் வக்கீல் பேருந்து நடத்துனரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனால் பேருந்து வானகரத்திலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் அப் பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி புகார் செய்தார்.
அதையடுத்து கோயம்பேடு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டிருந்த வானரகம் பகுதிக்கு விரைந்து வந்து, பாலியல் சீண்டல் தந்த அந்த நபரை கைது செய்தனர்.
பெண் வக்கீல் தந்த புகாரின் பேரில் அந்த நபரிடம் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரது பெயர் ராகவன் (40) கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
மேலும் பெண் வக்கீல் முன்னதாக வீடியோ பதிவு செய்து வைத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ராகவனின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | HBDRashmikaMandanna:ராஷ்மிகா மந்தனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR