HBDRashmikaMandanna:ராஷ்மிகா மந்தனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

 26 வயதாகும் ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாவில் 29.9 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2022, 12:35 PM IST
  • தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார்
  • விஜய்யின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு
  • இன்ஸ்டா மூலம் கோடிகளில் சம்பாதித்து வருகிறார்
HBDRashmikaMandanna:ராஷ்மிகா மந்தனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! title=

நேஷனல் கிரஷ் என 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Instagram

ராஷ்மிகா கர்நாடக மாநிலம் கொடங்காவில் பிறந்தவர். அதன்பின்னர் மைசூர், கூர்க் ஆகிய இடங்களில் படித்தார். சூற்றுச்சூழல் ஆர்வலரான இவர் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்வதையும் ஹாபியாக கொண்டிருந்தார். 2014-ம் ஆண்டு கிளீன் அண்ட் கிளியர் பேஸ் ஆஃப் இந்தியா விருதினை வென்று தனது திரைப்பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

Instagram

மேலும் படிக்க | தளபதி 66 படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!

அதன்பிறகு கிடைத்த விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். அதில் ஒரு விளம்பரத்தை பார்த்த இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனது படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தார். அந்த படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடிக்க ராஷ்மிகா நாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், நாயகனுடன் காதலிலும் விழுந்தார். படம் வெளியாகி சூப்பர் ஹிட். 4 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதன்பிறகு தெலுங்கில் சாலோ படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் ஓரளவுக்கு ஹிட் ஆனது.

அடுத்ததாக ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றது. படத்தின் நாயகன், நாயகி இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதன்பிறகு தனது காதலருடன் நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார். சினிமாவில் பிஸியாகிவிட்டதால் திருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்க நேரமில்லை என்று சிம்பிளாக சொல்லி கடந்து சென்றுவிட்டார். அதற்காக பல விமர்சனங்களையும் சந்தித்தார். பிரேக் - அப் பிறகு வந்த ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு அவரது முன்னாள் காதலர் ரக்‌ஷித் ரெட்டி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டது கவனம் பெற்றது. 

Instagram

மேலும் படிக்க | அஜித்தின் 3 மாத சாதனையை ஒரே நாளில் துவம்சம் செய்த விஜய்!

அதன்பிறகு தமிழில் சுல்தான் மூலம் நாயகியாக நேரடியாக அறிமுகம் ஆனார். தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தளபதி விஜய்யுடன் அடுத்த படத்தில் இவர் ஜோடி சேரலாம் என்று பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் அவ்வளவு இஷ்டமாம். அடிக்கடி தனது செல்ல நாய்க்குட்டியுடன் போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாவில் பதிவிடுவார். அதோடு பிங்க் கலர் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.

26 வயதாகும் ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாவில் 29.9 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். இன்ஸ்டாவில் விளம்பரம் மூலம் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். இவரது முகபாவனைகளை ரசிக்கவே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News