வீட்டிலேயே டாஸ்மாக்... சூறையாடிய பெண்கள் - ஆறாக ஓடிய மதுபானம்; தர்மபுரியில் பரபரப்பு
மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமம் பூதிநத்தம். இங்கிருந்து மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்றுதான் மது வாங்கி குடிக்க வேண்டும்.
இதனை பயன்படுத்தி பூதிநத்தம், பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்பட்டது.
கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்
இதனால் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதாகவும், கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமலும் எந்நேரமும் மது அருந்தி மதுபோதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இவர்களின் உடல் நலம் பாதிப்படைந்து வருவதோடு மட்டுமல்லாமல், போதிய வருமானம் இன்றி இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு!
இதனை எதிர்த்து கிராமத்திற்க்குள் மது விற்க அனுமதிக்க கூடாது என பாப்பாரப்பட்டி காவல் நிலையந்தில் பொதுமக்கள் சிலர் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையும், வருவாய்துறையும் மக்களின் புகாருக்கு செவிமடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூதிநத்தம் கிராமமக்கள், ஒன்றுதிரண்டு சட்ட விரோதமாக சந்துகடை வைத்து மதுபானத்தை விற்கும் ஜெயராமன் வீட்டை முற்றுகையிட்டு, சூறையாடினர்.
ஆறுபோல் ஓடிய மதுபானம்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரசு மதுபானங்களை வீதியில் கொட்டி உடைத்தனர். மதுபானம் ஆறு போல் வீதியில் வழிந்தோடியது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சந்து கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெண்டிங் மெஷின் விவகாரம்
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுவது வழக்கம்தான் என்றாலும் தற்போது மதுபான வெண்டிங் மெஷின் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த வெண்டிங் மெஷின் தமிழ்நாட்டில் மால்களில் செயல்படும் நான்கு கடைகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளதாகவும், கடைக்குள் இது பொருத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், 21 வயது குறைந்தவர்களும் இதனை எளிதாக அணுக இயலாது எனவும் டாஸ்மாக் உடனடியாக விளக்கம் அளித்தது.
இருப்பினும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து, வெண்டிங் மெஷின் மூலம் மதுபான விற்பனையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TASMAC: மதுபான விற்பனை மெஷின் எதற்கு...? பாயிண்டை பிடித்த டாஸ்மாக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ